+91 9842167567, 0452 2675674

logo

கோகிலா சித்த மருத்துவமனை கோவிட் பிரிவில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கவனத்திற்கு

கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கோவிட் சிகிச்சை பிரிவானது, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டலின் படி உயர்தரமான சித்த மருந்துகளின் மூலமாக கோவிட் நோய் தொற்றினை கட்டுப்படுத்த பயிற்சி மற்றும் முன் அனுபவமிக்க பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களுடன் இயங்குகிறது.

கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமானது 13 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் மூலிகைகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவின் உயர்ந்த தர அங்கீகாரமான NABH தரச்சான்று பெற்ற முதல் சித்த மருத்துவமனை.

தமிழக அரசு விருது பெற்ற டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் BSMS, MD (Siddha) தலைமையில் 10 க்கு மேற்பட்ட BSMS, MD மருத்துவ பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.

தலைமை மருத்துவமனை 1997 ஆம் ஆண்டில் இருந்து மதுரை ஜெய்ஹிந்துபுரத்திலும், கிளை மருத்துவமனை 2010 ஆம் ஆண்டில் இருந்து மதுரை திருமங்கலத்திலும் சித்த மருத்துவ சேவை புரிந்து வருகிறது. தற்சமயம் திருமங்கலத்தில் அமைந்துள்ள தேசிய தர அங்கீகாரம் பெற்ற கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமானது கோவிட் சிகிச்சைக்காக தமிழக அரசு அனுமதி பெற்றுள்ளது.

மூலிகை காற்று வீசும் இயற்கை சூழலில் காற்றோட்டமான இடத்தில் காலை மற்றும் மாலை சூரிய வெளிச்சம் படும்படியான இடத்தில் யோகாசனம், தியானம் மற்றும் எளிய உடற்பயிற்சி செய்யும் வசதி உண்டு.

நொச்சி, தும்பை இலைகளை போட்டு காற்றோட்டமான இடத்தில் நீராவி பிடிக்கும் வசதி உண்டு.

மூலிகை மற்றும் இயற்கை உணவுகள், சித்தா கசாயம், மூலிகை தேநீர் ஆகியன வழங்கப்படுவதுடன் நோயை விரைவில் குணப்படுத்தி உடலை நன்னிலைக்கு கொண்டுவர படிகபன்னீர் கலிக்கம், சுவாசத்தை சீராக்க ஓமப்பொட்டணம், தொண்டைச் சளி வெளியேற்ற வழலை வாங்குதல் ஆகியன இங்கு சிறப்பு சிகிச்சையாக வழங்கப்படுகின்றன.

தங்குவதற்கு முன் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் RTPCR பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை மென் நகல்களை 9842167567 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி மருத்துவரின் அனுமதி ஒப்புதல் பெறவேண்டும். அத்துடன் தங்கள் விரலில் மாட்டிய நிலையில் ஆக்சிஜன் செறிவு அளவு தெரியும் படியாக புகைப்படமும் அனுப்ப வேண்டும்.

அவசர சிகிச்சைக்கு அவசியம் ஏற்பட்டால் நவீன மருத்துவரால் நேரிடையாக அல்லது அவசரம் கருதி இணையம் மூலமாக நவீன மருத்துவ ஆலோசனையும் வழங்கப்படும்.

கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவமனை வரும்பொழுது இரண்டு போர்வைகள் அல்லது இரண்டு பாய்கள் (உறங்க மற்றும் யோகா செய்வதற்கு) கொண்டு வர வேண்டும்.

குறைந்தபட்சம் 7 நாட்கள் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அதன் பின் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். நோய் தொற்றை கட்டுப்படுத்த அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டி இருப்பதால் தாங்களே சொந்தமாக isolation kit (Pulseoxymeter, Digital Arm Thermometer, Digital BP Apparatus, Electric Vapourizer, Hand sanitizer அடங்கியது) தங்கள் அறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்பசை, பிரஷ், ஷாம்பு, சோப்பு, தேங்காய் எண்ணெய், சர்ப் பாக்கெட் அடங்கிய வரவேற்பு கிட் ஒருமுறை மட்டும் மருத்துவமனை சார்பாக இலவசமாக வழங்கப்படும்.

சித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள், தங்கள் உடல்நிலை மற்றும் நோயின் தீவிரம் பொருத்து தங்களுக்கு இங்கு வழங்கப்படும். ஆகவே வெளியில் இருந்து உறவினர்கள் தரும் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

மருத்துவர் கூறும் இரத்தப் பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

தேவைப்படின் 5 அல்லது 7 ஆம் நாள் CT ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலமாக போக்குவரத்து ஏற்பாடு செய்து தரப்படும்.

மருத்துவமனை வளாகத்தில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தடை செய்யப்பட்ட்ள்ளது.

சிகிச்சை பெறுபவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

7 நாட்கள் தங்கி சிகிச்சை பெற மருத்துவ சேவை, மருந்துகள், உணவு மற்றும் படுக்கை வசதி உட்பட கட்டணம் ரூபாய் 54000 மட்டும்.

ஐசோலேசன் கிட், இரத்தப்பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை கட்டணம் தனி.

ஐசோலேசன் கிட் கட்டணம் ரூபாய் 5500 மட்டும். இரத்தப்பரிசோதனை கட்டணம், தேவைப்பட்டால் RTPCR மற்றும் CT ஸ்கேன் பரிசோதனை தனியாக செய்யப்படும்.

சிகிச்சையின் முழு பலன் கிடைக்க எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நன்றி

நிர்வாகம்

கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்,
குன்னனம்பட்டி,
திருமங்கலம்,
மதுரை